உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதைகளில் ஆளிவிதையும் ஒன்று. ஆனால் இந்த இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழும். இதில் இதய நோயாளிகள் ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
இரத்த அழுத்தத்தைக் குறைக்க
ஆளி விதைகள் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இவை இதயத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
இரத்த உறைவு உருவாவதைத் தடுப்பதற்கு
ஆளி விதைகள் தமனிகளில் உறைவதைக் குறைத்து, சீரான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது
வீக்கத்தைக் குறைப்பதற்கு
ஆளி விதைகளில் ஒமேகா-3 மற்றும் லிக்னான்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கலாம்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த
ஆளி விதைகளில் தாவர அடிப்படையிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் உள்ளது. இது இதய நோயை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
இரத்த ட்ரைகிளிசரைடுகளைக் குறைப்பது
அதிகளவு ட்ரைகிளிசரைடுகள் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதன் படி, ஆளி விதைகள் உட்கொள்வது இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைகிறது
பக்கவாத அபாயத்தைக் குறைப்பது
ஆளி விதைகளை தொடர்ந்து உட்கொள்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தமனிகளில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்