ஸ்ட்ராங்கான இதயத்திற்கு காட் லிவர் எண்ணெய் தரும் நன்மைகள்

By Gowthami Subramani
17 Apr 2025, 18:59 IST

காட் லிவர் ஆயில்

காட் லிவர் ஆயில் என்பது காட் மீனின் கல்லீரலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த எண்ணெய் ஆகும். இது இதயம், மூட்டு மற்றும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும் வைட்டமின்கள் ஏ மற்றும் டி போன்றவற்றுடன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் இயற்கையான மூலமாகும்

கொழுப்பின் அளவை மேம்படுத்த

காட் லிவர் ஆயில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இதயப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கிறது

தமனிகளை ஆரோக்கியமாக வைக்க

காட் லிவர் எண்ணெயில் உள்ள வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கள் போன்றவை தமனிகளை நெகிழ்வாக வைத்திருக்கவும், விறைப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தை பராமரிக்க முக்கிய காரணியாகும்

ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த

இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் டி ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகிறது. இவை செல்கள் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து இதயத்தைப் பாதுகாக்க உதவுகிறது

வீக்கத்தைக் குறைப்பதற்கு

நாள்பட்ட வீக்கம் இதய நோய்க்கு ஒரு முக்கிய காரணியாகும். காட் லிவர் ஆயிலில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆபத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

இரத்த அழுத்தத்தைக் குறைக்க

காட் லிவர் எண்ணெயை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் இரத்த நாளங்களைத் தளர்த்தலாம். இது சிறந்த இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, லேசான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது நன்மை பயக்கும்

குறிப்பு

காட் லிவர் எண்ணெய் காப்ஸ்யூல்கள் ஒரு சக்திவாய்ந்த இதய ஆரோக்கிய தேர்வாக அமைகிறது. பாதுகாப்பான முடிவுகளைப் பெற எப்போதும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் இதை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது