உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சில உணவுகளை உட்கொள்வது, நிலையை மீண்டும் மோசமாக்கலாம். எனவே உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் இந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது
பாலாடைக்கட்டி
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் முக்கியமான ஒன்று பாலாடைக்கட்டி ஆகும். இதில் அதிகளவு சோடியம் உள்ளதால், இவற்ரைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்
இனிப்பு பானங்கள்
சர்க்கரை அதிகமாக உள்ள பானங்கள் எடை அதிகரிப்பிற்கு மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இனிப்பு பானங்களைத் தவிர்க்க வேண்டும்
காபி
காபி அதிகம் அருந்துவது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது இதய நோய் தொடர்பான அபாயங்களை அதிகரிக்கலாம். காபி குடிப்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்
ஃப்ரஞ்சு ஃப்ரைஸ்
உருளைக்கிழங்கு கொண்டு தயார் செய்யப்படும் ஃப்ரஞ்சு ஃப்ரைஸ் அதிக உப்பு கொண்டுள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கலாம். எனவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது
ஊறுகாய்
ஊறுகாயில் உப்பு அதிகளவில் நிறைந்திருக்கும். அதிக உப்பு உள்ள உணவுகள் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
இன்ஸ்டன்ட் சூப்கள்
இன்ஸ்டன்ட் சூப் வகைகளில் சோடியம் அதிகளவு உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த வகை சூப்களைத் தவிர்க்க வேண்டும்
மது அருந்துவது
அதிகளவிலான மது அருந்துதல் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மது அருந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டும்.