கெட்ட கொழுப்பை அடியோடு அகற்ற நீங்க சாப்பிட வேண்டிய விதைகள்

By Gowthami Subramani
08 Jun 2025, 10:44 IST

அன்றாட உணவில் பல்வேறு விதைகளைச் சேர்த்துக் கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் விதைகள் சிலவற்றைக் காணலாம்

எள் விதைகள்

இதில் லிக்னான்கள், ஆக்ஸிஜனேற்ற மற்றும் கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்ட தாவர கலவைகள் உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது

ஆளிவிதைகள்

ஆளி விதைகளில் ஆல்ஃபாலினோலெனிக் அமிலம் உள்ளது. இது ஒரு வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகும். இவை குறைந்த அளவிலான எல்டிஎல் கொழுப்புடன் தொடர்புடையதாகும்

பூசணி விதைகள்

இதில் அதிகளவிலான மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

சியா விதைகள்

சியா விதைகளில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கு உதவுகிறது

சூரியகாந்தி விதைகள்

இந்த விதைகள் பைட்டோஸ்டெரால்களின் நல்ல மூலமாகும். இது செரிமான மண்டலத்தில் உறிஞ்சப்படுவதற்கு கொழுப்பை எதிர்த்துப் போட்டியிடுவதன் மூலம் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது