ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் சில பழக்கங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். இதில் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பழக்க வழக்கங்களைக் காணலாம்
வழக்கமான உடற்பயிற்சியைத் தவிர்ப்பது
உட்கார்ந்த வாழ்க்கை முறை இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இந்நிலையில் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்வது இதயத்தை வலுவாக வைத்திருக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது
பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்ப்பது
நார்ச்சத்து இல்லாத, ஆரோக்கியமற்ற உணவுகளை மேற்கொள்வது கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. எனவே, இதயத்திற்கு உகந்த பெர்ரி, கீரைகள் மற்றும் நட்ஸ் வகைகளைச் சேர்க்கலாம்
அதிகப்படியான உப்பு உட்கொள்ளல்
அதிக உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். இது இதய பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே குறைந்த சோடியம் விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டும்
அதிகப்படியான மது அருந்துதல்
அதிகளவு மது அருந்துவது இதயத்தை சோர்வடையச் செய்யலாம். சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு மிதமான அளவு எடுத்துக் கொள்ளலாம் அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டும்
புகைபிடித்தலைத் தவிர்ப்பது
புகைபிடித்தல் இதயத்தையும் தமனிகளையும் சேதப்படுத்தலாம். இது இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. எனவே இதயம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்
மோசமான மன அழுத்தம்
நாள்பட்ட மன அழுத்தம் இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். தியானம் மற்றும் யோகா போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்