ஹை பிளட் ப்ரஸரா? இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க

By Gowthami Subramani
20 Jun 2024, 13:30 IST

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க பொருத்தமான உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இவர்கள் சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதில் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகளக் காணலாம்

ரொட்டி

சோடியம் உட்கொள்ளல் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையை உண்டாக்கும். எனவே சோடியம் குறைவாக உள்ள முழு தானிய ரொட்டி போன்றவற்றைச் சேர்க்கலாம்

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொள்வது திட்டமிடப்படாத எடை அதிகரிப்பின் அபாயத்தை அதிகரிக்கலாம். இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம்

சர்க்கரை பானங்கள்

உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை கொண்டவர்களுக்கு எப்போதாவது சர்க்கரை பானம் ஏற்றுக் கொள்ளத்தக்கது எனினும், அதிகப்படியான சர்க்கரை-இனிப்பு பானங்களை அருந்துவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்

தக்காளி சாஸ்

தக்காளி சாஸ் அருந்துவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. இது உயர் இரத்த அழுத்தத்திலும் பங்கு வகிக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தக்காளி சாஸை உட்கொள்ளக்கூடாது

சீஸ்

இந்த வகைகள் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்தும். எனவே உயர் இரத்த அழுத்தத்திற்கு சீஸ் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

பீட்சா

பீட்சா போன்ற உணவுகளில் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் கலவைகள் நிறைந்துள்ளது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்சாவைத் தவிர்ப்பது நல்லது

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

இதில் அதிகளவிலான சோடியம் நிறைந்துள்ளது. இவை உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது