குளிர்காலத்தில் பல காரணிகளால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம். குளிர் காலநிலையில் குறைந்த உடல் செயல்பாடு காரணமாக எடை அதிகமாகலாம். இவை அதிக கொழுப்புக்கு வழிவகுக்கிறது
இதய பாதிப்பு
இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்று அதிக கொலஸ்ட்ரால் இருப்பதும் ஆகும். எனவே இதய பாதுகாப்பிற்கு குறைந்த அளவிலான கொழுப்புகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்
உலர் பழங்கள்
உலர்ந்த பழங்கள் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதத்தை கொண்டுள்ளது. இவை கெட்ட கொலஸ்ட்ராலைத் தவிர்க்க உதவுகிறது. உலர் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் மல்டி வைட்டமின்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளை உட்கொள்வது பல நோய்களின் ஆபத்தைக் குறைக்கிறது. இவை கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உதாரணமாக முட்டைக்கோஸ், கீரை, தக்காளி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இவை இரத்த அழுத்தம், இரத்த உறைதல் பிரச்சனையைத் தடுக்கிறது. இதற்கு கடுகு அல்லது ஆளி விதைகள், ராகி, தினை மற்றும் சியா விதைகளை உட்கொள்ளலாம்
அவகேடோ
இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இதில் அவகேடோ பழங்களை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்
கஞ்சி மற்றும் ஓட்ஸ்
கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த ஓட்ஸ் மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குறைந்த அடர்த்தி உள்ள கொழுப்புப் புரதத்தை குறைக்க உதவுகிறது