இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவும் உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சில உணவுகளை இங்கே காண்போம்.
பெர்ரிஸ்
பெர்ரி பழங்களில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, பக்கவாதம் அபாயத்தைக் குறைக்கும்.
குறைந்த கொழுப்புள்ள பால்
பால் பொருட்களில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அதனால் கொழுப்பு குறைவான பால் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
ஓட்ஸ்
ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கான் எனும் நார்ச்சத்து, கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் மற்ற உணவுப் பொருட்களை விட சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவான அளவிலேயே உள்ளது.
டார்க் சாக்லேட்
இதில் ப்ளேலோனால்கள் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தம் உறைவதைத் தடுக்கவும் செய்யும்.
அவகேடோ
அவகேடோ பழத்தில் அதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு என்னும் நல்ல கொழுப்பு அதிகளவு நிறைந்துள்ளது.
தக்காளி
இதில் உள்ள லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமான சத்துக்களாகும்.