உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க இந்த மசாலா பொருள்கள் உதவும்

By Gowthami Subramani
21 Mar 2025, 15:59 IST

உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க பொதுவாக மருந்துகள் மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை தேவைப்படுகிறது. இதில் சில மசாலாப் பொருள்களும் அடங்கும். இதில் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவும் மசாலாப் பொருட்களைக் காணலாம்

பூண்டு

பூண்டு அல்லிசின் போன்ற தாதுக்கள் உள்ளது. இது இரத்த நாளங்களைத் தளர்த்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்

இஞ்சி

இதில் இஞ்சியால் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை வீக்கத்தைக் குறைப்பதற்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. மேலும் இது இரத்த நாளங்களைச் சுற்றியுள்ள தசைகளைத் தளர்த்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

ஏலக்காய்

ஏலக்காய் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கலாம்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமினில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இவை இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது

கருப்பு மிளகு

இதில் பைப்பரின் என்ற ஒரு தனிமம் உள்ளது. இது உடலில் அதிகப்படியான இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது

இலவங்கப்பட்டை

இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த காரணியாகும். மேலும் இதில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது