இதய நோய் வரதுக்கு முன்னாடி தோன்றும் அறிகுறிகள் இது தான்!

By Gowthami Subramani
17 Jul 2024, 09:00 IST

சில உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை நடவடிக்கைகள் காரணமாக இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் உண்டாகலாம். இதில் இதயம் தீவிர நிலையை அடையும் முன் தோன்றும் அறிகுறிகளைக் காணலாம்

மூச்சுத்திணறல்

இதயப் பிரச்சனைகளின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக மூச்சுத்திணறல் அமைகிறது. குறிப்பாக ஓய்வு அல்லது உடல் உழைப்பில் இருக்கும் போது இந்நிலை ஏற்படலாம். மேலும் வழக்கமான பணிகளின் போது காற்றுக்காக மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அது இதயத்தில் ஏற்படும் சிக்கலைக் குறிக்கிறது

அதிக சோர்வு

இதய பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறிகளில் ஒன்றாக விவரிக்க முடியாத சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படுவதாகும். இதில் போதுமான ஓய்வுக்குப் பிறகும் சோர்வை உணர்வர். இந்நிலையில் உள்ளவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது

சீரற்ற இதயத்துடிப்பு

சீரான இதயத்துடிப்பு ஆரோக்கியமான இதயத்தைக் குறிப்பிடுகிறது. ஆனால், இதயத்துடிப்பு சீரற்ற அல்லது ஒழுங்கற்றதாக மாறும் போது அது இதயப் பிரச்சனையின் முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது

தொடர் இருமல்

ஆய்வின் படி, இளஞ்சிவப்பு நிற அல்லது வெள்ளை நிற சளியை உருவாக்கக் கூடிய நீண்ட நாள்களாக ஏற்படும் இருமல் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கலாம். இதற்கு இரத்தத்தை இதயம் திறம்பட எடுத்துச் செல்ல இயலாத போது நுரையீரலில் குவிவதே காரணமாகும்

வீக்கம்

இதய செயலிழப்புக்கான முக்கிய அறிகுறியாக, பாதங்கள், கணுக்கால், கால்க மற்றும் வயிற்றில் வீக்கம் ஏற்படலாம். இது இதயம் இரத்தத்தை திறம்பட செயலாற்ற போராடுவதால் மற்ற உடல் பாகங்களில் குவித்து விடும். எனவே அசாதாரண வீக்கத்தை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது