மாரடைப்பு வருவதற்கு முன் தோன்றும் அறிகுறிகள்!

By Karthick M
11 Oct 2024, 20:36 IST

மாரடைப்பு என்பது இதயம் திடீரென துடிப்பதை நிறுத்தி, உடலில் இரத்த ஓட்டம் துண்டிக்கப்படும் போது நிகழ்வதாகும். இது ஏற்படும் முன் சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.

மூச்சுக் காற்று ஒழுங்கற்றதாகவோ அல்லது ஆழமற்றதாகவோ இருப்பின், உடனடியாக மருத்து ஆலோசனைப் பெறுவது நல்லது.

முகம் சிவந்து போவது, கை மற்றும் கால்கள் மரத்துப் போவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

இதயம் செயல்படுவது நிறுத்தும் போது, மூளை சிக்னல்களை அனுப்பத் தொடங்குகிறது. இதன் விளைவாகவே கூச்ச உணர்வு அல்லது மூட்டுகள் உணர்வின்மை ஏற்படும்.

இதயத் துடிப்பு இல்லாதது அல்லது சீர்குலைவு என்பது, ஒழுங்கற்ற அல்லது முறையில்லாத இதயத்துடிப்பைக் குறிக்கும் பொதுவான அறிகுறியாகும்.

மயக்கம் அல்லது குமட்டல் உணர்வு, தோல் மிக அதிக வெளிர் நிறமாகுதல், அதிக தலைவலி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.