உடலில் மிக முக்கிய உறுப்பான இதயத்தில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க பலர் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதற்கு முறையாக என்ன செய்வது என பார்க்கலாம்.
இதய நோய் வராமல் தடுக்க உதவும் மிக முக்கியமான தேர்வாக அமைவது தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதாகும்.
ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.
இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
புகையிலை மற்றும் மது அருந்துதலை முற்றிலும் தவிர்க்க வேண்டியது மிக மிக முக்கியம், இது இதய நோய் பாதிப்பை பெருமளவு தவிர்க்க உதவும்.