தேங்காய் எண்ணெய் OR ஆலிவ் ஆயில் -இதய ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?
By Kanimozhi Pannerselvam
14 Mar 2024, 13:35 IST
இதயத்திற்கு தேங்காய் எண்ணெய்
முதிர்ந்த தேங்காய்களில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெயில், அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இதில் எல்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிக்க முடியும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதயத்திற்கு ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளின் நுகர்வு இதய நோய் அபாயத்தைக் குறைப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
சாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் நிறைவுற்ற கொழுப்பு சத்து தேங்காய் எண்ணெயில் 82 சதவீதம் உள்ளது. இது உடல் எடை அதிகரிப்பு, இதய பாதிப்புகளை உருவாக்ககூடியதாக கருதப்படுகிறது. அதேசமயம் ஆலிவ் ஆயிலில் வெறும் 14 சதவீதம் மட்டுமே உள்ளது.
எது சிறந்தது?
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுக்கு இரண்டையும் ஒப்பிடுகையில், ஆலிவ் ஆயிலில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதயம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக விளங்குகிறது.