பார்வை திறன் முதல் செரிமான மேம்பாடு வரை.. கேரட்டின் நன்மைகள்..!!

By Ishvarya Gurumurthy G
11 Jan 2024, 12:30 IST

குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் நன்மை குறித்து அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.

கேரட்டில் உள்ள சத்துக்கள்

கேரட்டில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் இரும்பு, ஃபோலேட், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே நிறைய உள்ளன.

கண்களுக்கு நன்மை பயக்கும்

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. கேரட் சாப்பிட்டால் கண்பார்வை மேம்படும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கேரட்டை உட்கொள்வதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி வலுவடைந்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் எளிதில் நோய்வாய்ப்படுவதில்லை.

எடை குறைக்க உதவும்

கேரட் நுகர்வு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவும். கூடுதலாக, இது குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. இது சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது.

சரியான செரிமானம்

கேரட் சாப்பிடுவதால் அசிடிட்டி, கேஸ் போன்ற பிரச்னைகள் வராது. இதனால் செரிமான அமைப்பு சீராக இருக்கும்.

சரும ஆரோக்கியம்

கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. இதனால் சருமம் பளபளப்பாகும்.

முடி உதிர்வதை தடுக்கும்

முடி வளர்ச்சிக்கும், முடி உதிர்தலைத் தடுப்பதற்கும் கேரட் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி முடி உதிர்வை தடுக்கிறது.