இதய ஆரோக்கியத்திற்கு இந்த காய்கறிகளை சாப்பிடுங்க.

By Gowthami Subramani
27 Dec 2023, 12:11 IST

உடலில் அதிகளவிலான கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பது இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க இதய நோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும் காய்கறிகள் சிலவற்றைக் காண்போம்

காரணிகள்

உடல் பருமன், அதிகப்படியான ஆல்கஹால், புகையிலை பயன்பாடு, மோசமான உணவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளால் இதயத்தில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் மாரடைப்பு போன்ற அபாயங்களும் அதிகரிக்கலாம்

இயற்கை முறையில்

இயற்கையான முறையில் கெட்ட கொழுப்பைக் குறைக்க கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை எடுத்டுக் கொள்ளலாம். இவை இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது

முள்ளங்கி

முள்ளங்கியில் உள்ள அந்தோசயினின் என்ற ஆதாரம் உடலில் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள கால்சியம், பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது

கேரட்

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து இதய நோய்களைத் தடுக்கிறது. இதில் பெக்டின் வடிவில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

ப்ரோக்கோலி

இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகளவிலான கொலஸ்ட்ராலைச் சமாளிக்க சிறந்த உணவாகச் செயல்படுகிறது. மேலும் இதில் உள்ள சல்பர் நிறைந்த கலவை ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது

பரட்டைக் கீரை

இந்த கீரையில் பொட்டாசியம், ஃபோலேட், நார்ச்சத்துக்கள், கால்சியம் போன்றவை காணப்படுகிறது. இதன் ஆரோக்கியமான கூறுகள் எல்டிஎல் அளவைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது

காலிஃபிளவர்

காலிஃபிளவரில் உள்ள சல்ஃபோராபேன் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது