அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்க தினமும் இத செய்யுங்க

By Gowthami Subramani
07 May 2024, 09:00 IST

மோசமான உணவுப்பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம். இதில் உயர் கொலஸ்ராலைக் குறைக்க தினந்தோறும் கடைபிடிக்க வேண்டிய அன்றாட நடவடிக்கைகள் சிலவற்றைக் காணலாம்

உடற்பயிற்சி

நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைபயிற்சி அல்லது சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கையாள உதவுகிறது

எலுமிச்சை நீர்

இதில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த பானம் பித்தத்தை உற்பத்தி செய்து கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. காலை நேரத்தில் இந்த நீர் அருந்துவது அந்த நாளை சிறப்பாக தொடங்க உதவுகிறது

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கும் திறனை கொண்டுள்ளது

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது

துரித உணவு, சர்க்கரை பானங்கள் மற்றும் கெட்ட கொழுப்புகள்நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது கொழுப்பைக் குறைப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது

ஆரோக்கியமான காலை உணவு

பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் கொண்ட நார்ச்சத்து நிறைந்த காலை உணவுகளை எடுத்துக் கொள்வது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது

மன அழுத்தம்

ஆழ்ந்த சுவாச பயிற்சி, தியானம் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது

இந்த வழிமுறைகளைக் கையாள்வது அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. எனினும், சரியான வழிகளைப் பெற மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது