சிறந்த இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய பால் பொருள்கள்

By Gowthami Subramani
03 Apr 2024, 10:52 IST

இதய ஆரோக்கியத்திற்கு சரியான பால் பொருள்களைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. இதன் மூலம் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் நன்மை பெறலாம். இதய நோயாளிகளுக்கு உதவும் பால் பொருள்களைக் காணலாம்

பால் பொருள்களில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. இது உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்

குறைந்த கொழுப்புள்ள பால்

குறைந்த கொழுப்பு கொண்ட பால் அல்லது முற்றிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை எடுத்துக் கொள்ளலாம்

பாலாடைக்கட்டி

குறைந்த கொழுப்பு கொண்ட பாலாடைக்கட்டி மிதமான நிறைவுற்றதாக இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. எனினும் இதில் அதிக கலோரி இருப்பதால் பகுதிக்கட்டுப்பாடு அவசியமாகும்

தயிர்

குறைந்த அளவிலான கொழுப்பு கொண்ட தயிரை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக சர்க்கரை இல்லாத நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதாக அமைகிறது

கிரேக்க தயிர்

வழக்கமான தயிருடன் ஒப்பிடுகையில் கிரேக்க தயிர் குறைந்த கார்போஹைட்ரேட்டுகளையும், உயர் புரதத்தையும் கொண்டுள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்