ஹை கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைக்க இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக்கோங்க

By Gowthami Subramani
19 Mar 2025, 15:33 IST

இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக ஹை கொலஸ்ட்ரால் அமைகிறது. இதன் அறிகுறிகளாக நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், இதயத்துடிப்பு பிரச்சனை போன்ற கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தலாம். இந்த ஹை கொலஸ்ட்ராலை நிர்வகிக்க மஞ்சள் ஒரு சிறந்த தீர்வாகும். இதில் LDL உயர் கொழுப்பை நிர்வகிக்க மஞ்சள் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்

இரத்த நாளங்களின் வீக்கம் குறைய

உடலில் அதிக கொழுப்பு இருப்பது இரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். இதற்கு மஞ்சள் ஒரு சிறந்த தேர்வாகும். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இந்த வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இவை இரத்த ஓட்டம் மற்றும் இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது

HDL கொழுப்பின் அளவை மேம்படுத்த

மஞ்சளில் உள்ள குர்குமின் HDL (நல்ல) கொழுப்பின் அளவை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. அதிக HDL அளவுகள் இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

LDL கொழுப்பைக் குறைப்பதற்கு

இதில் உள்ள குர்குமின் கலவை நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதுடன், LDL (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், தமனிகளில் பிளேக் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

பித்த உற்பத்தியை அதிகரிக்க

கல்லீரலை பித்தத்தை உற்பத்தி செய்யத் தூண்டுவதற்கு மஞ்சள் உதவுகிறது. உணவு கொழுப்புகளை உடைத்து, கொழுப்பின் அளவை மிகவும் திறம்பட கட்டுப்படுத்த மஞ்சள் சிறந்த தேர்வாகும்

எடை மேலாண்மையை ஆதரிக்க

கொழுப்பைக் கட்டுப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எடையை பராமரிப்பது அவசியமாகும். மஞ்சளில் உள்ள குர்குமின் கொழுப்புத் திரட்சியைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது சிறந்த சமநிலையை ஊக்குவிக்கிறது

ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பதற்கு

ஆக்ஸிஜனேற்றப்பட்ட LDL கொழுப்பு காரணமாக பிளேக் உருவாக அதிக வாய்ப்புள்ளது. குர்குமின் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, LDL ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கிறது. மேலும் தமனிகளை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது