உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோல் செய்ய உதவும் 7 பானங்கள்

By Gowthami Subramani
29 Oct 2024, 18:00 IST

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாகவே குறைக்க சில ஆரோக்கியமான பானங்கள் உதவுகிறது. இதில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் தினசரி வழக்கத்தில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான பானங்களைக் காணலாம்

தண்ணீர் அருந்துவது

இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு குடிநீர் அல்லது ஏதேனும் திரவம் அருந்துவது நீரேற்றமடையச் செய்வதுடன் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

மாதுளை சாறு

மாதுளையில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

செம்பருத்தி டீ

செம்பருத்தியானது அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இது இரத்த நாளங்களைத் தளர்த்தவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது

பீட்ரூட் சாறு

பீட்ரூட் சாற்றில் நிறைந்த நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சிறந்த நன்மைகளைப் பெற புதிய சாறு அருந்தலாம்

கிரீன் டீ

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உட்கொள்வது இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது

பெர்ரி ஸ்மூத்தி

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பெர்ரி ஸ்மூத்திகளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

திராட்சைச் சாறு

திராட்சைப்பழம், மற்ற பழங்களைப் போலவே, நார்ச்சத்துக்கான சிறந்த தேர்வாகும். இவை வீக்கத்தைக் குறைக்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது