சமோசா, பிரஞ்சு பிரைஸ், சிக்கன் நகெட்ஸ் ஆகியவற்றில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்பு அதிகம். இவை இதயத் தமனிகளில் பிளேக் உருவாவதற்கு காரணமாகின்றன. இதனால் இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பேக்கரி உணவுகள்
குக்கீஸ், கேக், பேஸ்ட்ரி போன்ற பேக்கரி உணவுகளில் சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம். இவை இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.
சிவப்பு இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம். இதயத் தமனிகளில் கொலஸ்ட்ரால் குவிகிறது. இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் நான்வெஜ் பிரியராக இருந்தால், சிவப்பு இறைச்சிக்கு பதிலாக ஒல்லியான இறைச்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
கூல்ட்ரிங்க்ஸ்
சர்க்கரை பானங்கள் குறிப்பாக சோடா, எனர்ஜி டிரிங்ஸ், பழச்சாறு பாக்கெட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. இவை உடலில் கூடுதல் கலோரிகளை உண்டாக்குகிறது. இது விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் டைப் 2 நீரிழிவு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த நிலை இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான சாஸ்கள், பன்றி இறைச்சி, ஹாட் டாக் போன்றவற்றில் சோடியம் மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் அதிகம் உள்ளன. அதிகப்படியான சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது இதய நோய்களை உண்டாக்கும். எனவே புதிய இறைச்சி அல்லது புதிய காய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.