இம்யூனிட்டியை அதிகரிக்கும் ஜிங்க் நிறைந்த வேகன் டயட் உணவுகள்

By Gowthami Subramani
16 Aug 2024, 09:18 IST

சைவ உணவு உண்பவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதில் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகள் சிலவற்றைக் காணலாம்

பருப்பு வகைகள்

பருப்பு, பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள் ஜிங்க் நிறைந்த சிறந்த ஆதாரங்களாகும். இதை சாலட்கள், சூப்கள் போன்ற வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம்

நட்ஸ்

முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை உட்கொள்வது துத்தநாக உட்கொள்ளலை அதிகரிக்கிறது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது

டோஃபு

டோஃபு போன்ற சோயா நிறைந்த பொருள்களில் ஜிங்க் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்

விதைகள்

விதைகள் ஜிங்க் உணவுகளின் அடிப்படை ஆதாரமாகும். இதற்கு பூசணி விதைகள், சணல், எள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்

செறிவூட்டப்பட்ட உணவுகள்

காலை உணவு தானியங்கள், தாவர அடிப்படையிலான பால் மற்றும் ஊட்டச்சத்து ஈஸ்ட் போன்ற பல்வேறு சைவ நட்பு உணவுகள் ஜிங்க் நிறைந்ததாகும். இவை உடலில் துத்தநாக தேவைகளை பூர்த்தி செய்து நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது

காய்கறிகள்

இதில் ஜிங்க் சத்துக்கள் அதிகளவு இல்லையெனினும், சில வகைகள் ஜிங்கின் ஒட்டுமொத்த உட்கொள்ளலுக்கு பங்களிக்கிறது. இதற்கு காளான்கள், கீரைகள் மற்றும் காலே போன்றவற்றை உட்கொள்ளலாம்

முழு தானியங்கள்

குயினோவா, ஓட்ஸ் மற்றும் பிரவுன் அரிசி போன்ற முழு தானியங்கள் ஜிங்க் நிறைந்த ஆதாரங்களாகும். இது நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது