கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கணுமா? இத நீங்க கட்டாயம் செய்யணும்

By Gowthami Subramani
04 Apr 2025, 19:20 IST

உடலின் இயற்கையான நச்சு நீக்கியாக கல்லீரல் அமைகிறது. இது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் உதவும் சில குறிப்புகளைக் காணலாம்

உடற்பயிற்சி செய்வது

வழக்கமாக உடற்பயிற்சி செய்வது கல்லீரலில் கொழுப்பு சேர்வதைக் குறைக்கிறது. இது வீக்கத்தைக் குறைக்கவும், உகந்த கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது

நீரேற்றமாக இருப்பது

போதுமான நீரேற்றத்தின் உதவியுடன், கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்றலாம். இது உடலை திறம்பட சுத்தப்படுத்துவதுடன், அதன் திறனை ஆதரிக்கிறது

சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவைக் குறைப்பது

அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு காரணமாக, கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கலாம். இது கொழுப்பு கல்லீரல் நோய்க்கு பங்களிக்கிறது

கல்லீரலுக்கு உகந்த உணவு சாப்பிடுவது

மஞ்சள், பூண்டு, பீட்ரூட், இலை கீரைகள் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் போன்ற கல்லீரலுக்கு உகந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். இவை வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரல் நச்சுத்தன்மையை அகற்றவும் உதவுகிறது

மதுவைக் கட்டுப்படுத்துதல்

மது அருந்துவது கல்லீரலை சேதப்படுத்துவதன், அது மேலும் சுமையை உருவாக்குகிறது. மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்