கடுமையான கோடை வெப்பத்தின் காரணமாக நீரிழப்பு, சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதத்திற்கு வழிவகுக்கலாம். இந்த வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க, உடலைக் குளிர்ச்சியாக வைக்க வேண்டும். இதில் வெப்பத்தைத் தணிக்க உதவும் குளிர்ச்சி மிக்க புத்துணர்ச்சியூட்டும் பானங்களைக் காணலாம்
மோர்
இது உடலைக் குளிர்விக்க உதவக்கூடிய சிறந்த பானமாகும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீரிழப்பு நிலையை மீட்டெடுக்கும் ஒரு இயற்கை புரோபயாடிக் ஆக செயல்படுகிறது
தேங்காய் நீர்
இதில் நல்ல அளவிலான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளது. தேங்காய் நீர் அருந்துவது உடலில் இழந்த திரவங்களை மீட்டெடுக்கவும், நீரிழப்பைத் தடுக்கவும் உதவுகிறது
எலுமிச்சை நீர்
இது உடலுக்குக் குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய பானமாகும். எலுமிச்சை உப்பு சர்க்கரை கலவை உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும், வெப்ப சோர்வைத் தணிக்கவும் உதவுகிறது
தர்பூசணி சாறு
இது நீரேற்றமிகுந்த சாறு ஆகும். இதில் 92% அளவிலான நீர்ச்சத்துக்களும், அத்தியாவசிய வைட்டமின்களும் நிறைந்துள்ளது. இந்த பானம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது
மாம்பழ பானம்
இது கடுமையான கோடைக்காலத்தில் உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குளிர்ச்சியூட்டும் பானமாகும்