முட்டை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் வேகவைத்த முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
வேகவைத்த முட்டைகளில் வைட்டமின்கள் ஏ, பி5, பி12, டி, ஈ மற்றும் கே, ஃபோலேட், பாஸ்பரஸ், செலினியம், கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன
புரதம்
முட்டைகள் ஒரு முழுமையான புரதச்சத்துக்கள் நிறைந்ததாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது
வைட்டமின் டி சத்துக்கள்
ஒரு வேகவைத்த முட்டையானது தினசரி நமக்குத் தேவையான வைட்டமின் டி தேவைகளில் ஒரு பகுதியை வழங்குகிறது. இது பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது
கோலின்
வேகவைத்த முட்டைகள் கோலினின் முதன்மையான மூலமாகக் கருதப்படுகிறது. இது செல்லுலார் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு முக்கியமானது
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
முட்டைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு அத்தியாவசிய கொழுப்பாகக் கருதப்படுகிறது
நல்ல கொழுப்பு
முட்டைகளை உட்கொள்வது உயர் அடர்த்தி கொழுப்பு புரதம் அல்லது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இது பக்கவாதம் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது