உடலை கதகதப்பாக வைத்திருக்க இந்த சூப் குடிக்கவும்.!

By Ishvarya Gurumurthy G
01 Feb 2024, 13:21 IST

குளிர்காலத்தில் உங்கள் உடலை கதகதப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் சூப் ரெசிபிகளை இங்கே காண்போம்.

காய்கறி சூப்

கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், செள செள, தண்ணீர், மிளகு, உப்பு, கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து குடிக்கவும். இந்த காய்கறி சூப் பல சத்துக்களை கொண்டுள்ளது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ளலாம்.

கொள்ளு சூப்

கொள்ளு, தண்ணீர், உப்பு, மிளகு போன்றவற்றை குக்கரில் சேர்த்து 8 முதல் 10 விசில் வரை வைக்கவும். பின் அதை வடிகட்டி குடிக்கவும். இது சளி இருமலை குறைக்கவும், உடை எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

கீரை சூப்

எந்த கீரை வகையாக இருந்தாலும் அதனுடன், கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகத்தூள், உப்பு, வெண்ணெய் போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து குடிக்கவும்.

​மஷ்ரூம் சூப்

மஷ்ரூம், சோளமாவு, பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், தண்ணீர், வெண்ணெய் போன்றவற்றை கொண்டு சூப் செய்து குடிக்கவும்.

​மட்டன் சூப்​

ஆட்டின் நெஞ்செலும்பு, ​காலை எடுத்துக்கொள்ளவும், இதனுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகுப்பொடி, மிளகாய்த்தூள், சீரகம், சோம்பு, மஞ்சள், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்துமல்லி போன்றவற்றை இணைத்து குக்கரில் 8 விசில் வரை வைக்கவும். பின் இந்த சூப்பை ருசிக்கவும்.