ஏன் கட்டாயம் முருங்கை பொடி சாப்பிடனும் தெரியுமா?

By Karthick M
23 Aug 2024, 21:39 IST

பல இயற்கை பண்புகள்

முருங்கைக்காயில் பல இயற்கை பண்புகள் உள்ளன. இது ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கட்டாயம் ஏன் முருங்கை பொடியை சாப்பிட வேண்டும் என பார்க்கலாம்.

உடல் பாகங்களுக்கு நன்மை

முருங்கை பொடியில் புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இது கல்லீர், சிறுநீரகம், இதயம் மற்றும் நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

முருங்கை பொடி உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எலும்பு ஆரோக்கியம்

கணிசமான அளவு கால்சியம், இரும்புச்சத்து உள்ளது. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கும் இரத்த சோகையை எதிர்த்துப் போராடுவதற்கும் சிறந்த தேர்வாக அமைகின்றன.

ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலம்

தசை பிரச்சனையை போக்கவும், ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டிற்கும் நன்மை தரும். இது புரதத்தின் நல்ல மூலமாகும். அவை ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களை கொண்டிருக்கின்றன.

முருங்கை பொடி ஊட்டச்சத்தின் ஒரு சக்தியாக இருக்கிறது. இதை நீங்கள் தேநீரில் கலந்தும், சாதாரண நீரில் கலந்தும் எளிதாக தினசரி குடிக்கலாம்.