நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை சரியான முறையில் எடுத்துக் கொள்வதைப் போல, சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதும் அவசியமாகும். குறிப்பாக, இரவு தூங்கும் முன் சீக்கிரமாக உணவை உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
எடைக் கட்டுப்பாடு
இரவில் விரைவாக உணவை உட்கொள்வது எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது. இதன் மூலம் உடலில் நச்சுக்கள் குவிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இவ்வாறு உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கிறது
செரிமான மேம்பாட்டிற்கு
இரவு தூங்கும் முன், சீக்கிரமாக உணவை உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இது உணவை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
முன்னதாக இரவு உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கலாம்
அசிடிட்டி, வயிறு உப்புசத்தைக் குறைக்க
இரவு தூங்கும் முன்பாக உணவை சாப்பிடுவது அசிடிட்டி மற்றும் வயிறு உப்புசம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதைக் குறைக்க இரவில் விரைவாக உணவை எடுத்துக் கொள்ளலாம்
ஆழ்ந்த உரக்கம்
இரவு நேரங்களில் கனமான உணவை எடுத்துக் கொள்வது இரவு தூக்கத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, லேசான உணவை, முன்னதாக சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தி இரவில் நல்ல தூக்கத்தைத் தருகிறது