பெர்ரி வகைகளில் ஒன்றான மல்பெர்ரி உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் மல்பெர்ரி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்
ஊட்டச்சத்து நிறைந்த பழம்
இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மை பயக்கும்
இதய ஆரோக்கியத்திற்கு
மல்பெரி பழங்கள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
மல்பெரியில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. குளிர் மாதங்களில் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
பார்வை ஆரோக்கியத்திற்கு
மல்பெரி பழங்கள் வைட்டமின் ஏ-ன் சிறந்த மூலமாகும். இது கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், பார்வை சிக்கல்களைத் தடுக்கவும் உதவுகிறது
பளபளப்பான சருமத்திற்கு
மல்பெரியில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து கணப்படுகிறது. இது சருமத்திற்கு ஊட்டமளித்து, பளபளப்பைத் தருகிறது
மூளை செயல்பாட்டை ஆதரிக்க
மல்பெரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது