இவங்க எல்லாம் கட்டாயம் பசலைக்கீரை சாப்பிடக்கூடாது!
By Kanimozhi Pannerselvam
22 Oct 2024, 12:30 IST
பசலைக்கீரை நன்மைகள்
பசலைக் கீரையில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், சிலர் இந்த கீரையை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக முடியும், அவர்கள் யார் என பார்க்கலாம்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
சிறுநீரக கற்கள், உணவு ஒவ்வாமை மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், பசலைக்கீரை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும்.
கீரையில் உள்ள பியூரின்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இது மூட்டு வலியை அதிகரிக்கும். ஏற்கனவே யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கீரையைத் தொடக்கூடாது.
மருந்து
நீங்கள் ஏற்கனவே இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், தற்செயலாகக்கூட இந்தகீரையை உட்கொள்ள வேண்டாம். இதிலுள்ள வைட்டமின் கே, இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் வினைபுரிந்து உங்களை நோய்வாய்ப்படுத்தும்.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் கீரை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். கீரையில் ஆக்ஸாலிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதால், சிறுநீரகக் கல் நோயாளிகளின் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
கால்சியம் உறிஞ்சலில் தடை
கீரை மற்றும் கேல் போன்ற பச்சை காய்கறிகளில் கால்சியம் உள்ளது, ஆனால் அவற்றில் உள்ள ஆக்சலேட்டுகள் கால்சியத்தை பிணைத்து, கால்சியத்தை உறிஞ்சுவதை உடல் தடுக்கிறது.
ஓவ்வாமை
சிலருக்கு கீரை என்றால் ஒவ்வாமை இருக்கலாம். கீரை இலைகளை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தும். சில சமயங்களில் கீரை ஒவ்வாமையால் வாயின் உள்ளேயும், வாயிலும் கொப்புளங்கள் ஏற்படும். அவர்கள் பசலைக்கீரையை தவிர்ப்பது நல்லது.