இவர்கள் எல்லாம் ஜிம் பக்கம் தலை வைத்து கூட படுக்க கூடாது!

By Devaki Jeganathan
19 Feb 2024, 12:28 IST

உடல் ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்க ஜிம் செல்வது வழக்கம். நகரங்களில் மட்டும் அல்ல, கிராமங்களிலும் ஜிம் செல்லும் மோகம் அதிகரித்துள்ளது. தினமும் ஜிம்முக்கு செல்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், ஜிம் செல்வது சிலருக்கு ஆபத்து. அவர்கள் யாரென பார்க்கலாம்.

எப்போது ஜிம்மிற்கு செல்லக்கூடாது

காலையில் ஜிம் செய்வது மிகவும் நல்லது. இது உடலில் உள்ள சோம்பலை நீக்குகிறது. ஆனால், உணவு சாப்பிட்ட உடனேயே ஜிம்மிற்கு செல்லக்கூடாது. இது உங்களுக்கு பல பிரச்சினையை ஏற்படுத்தும்.

சிறிய குழந்தைகள்

இப்போதெல்லாம், சிறு குழந்தைகள் கூட பெரியவர்களை பார்த்து ஜிம்மிற்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், இளம் வயதில் ஜிம்மிற்கு செல்வதால் எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகள் வலுவிழந்துவிடும்.

உடல் வளர்ச்சி தடைபடும்

சிறு வயதிலேயே உடற்பயிற்சி செய்வது குழந்தைகளின் உடல் வளர்ச்சியைத் தடுக்கும். நீங்கள் 15 முதல் 20 வயதுக்குள் இருந்தால், கண்டிப்பாக ஒருமுறை மருத்துவரை அணுகவும்.

கர்ப்ப காலத்தில் ஜிம்

பெண்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால், நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது மாதவிடாய் நடந்து கொண்டிருந்தாலோ ஜிம்மிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

பிரசவத்திற்கு பின்

குழந்தை பெற்ற பெண்கள் சுமார் 5 மாதங்களுக்கு ஜிம்மிற்கு செல்லக்கூடாது. இதைச் செய்வது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

வயதான மக்கள்

உங்கள் வயது 50-க்கு மேல் இருந்தால், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இடுப்பு அல்லது கால் பிரச்சினை

உங்கள் இடுப்பில் அல்லது கால்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், நீங்கள் ஜிம்மிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கலாம்.