இவங்க எல்லாம் தவறுதலாக கூட தக்காளி சாப்பிடக்கூடாது!
By Kanimozhi Pannerselvam
24 Oct 2024, 22:09 IST
தக்காளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் சில பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அதைச் சாப்பிடாமல் விலகி இருக்க வேண்டும். இல்லையெல் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வாமை பிரச்சனை
தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன் கலவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே, தக்காளியை அதிகமாக உட்கொள்வதால் இருமல், தும்மல், தொண்டை வலி, முகம் மற்றும் நாக்கு வீக்கம் ஏற்படும். உங்களுக்கு ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், தக்காளி உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு உள்ள பெண்கள் தக்காளியை சாப்பிடக்கூடாது. தக்காளியில் செய்யப்படும் சூப்கள் மற்றும் சாஸ்களையும் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதால் இரத்தப்போக்கு அதிகரிக்கும்.
வாயு, அசிடிட்டி, அல்சர்
வாயு மற்றும் அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்களும் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தக்காளி சாப்பிடுவதால் உடலில் செரிமானம் குறையும். புளிப்புச் சுவையுடன் நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும்.
வயிற்றுப்போக்கு
தக்காளி நீர்ச்சத்து தரும் காய்கறி என்று அறியப்பட்டாலும், வயிற்றுப்போக்கின் போது அதைத் தவிர்ப்பது நல்லது. தக்காளியில் உள்ள சால்மோனெல்லா என்ற பாக்டீரியா வயிற்றுப்போக்கு பிரச்சனையை அதிகப்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால் தக்காளியை தவிர்ப்பது நல்லது.