மாதுளை உணவில் சேர்க்கக்கூடிய ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். எனினும், மாதுளை நுகர்வுடன் தொடர்புடைய சில ஆபத்துகளும் உள்ளது. இதில் மாதுளம்பழத்தை யார் தவிர்க்க வேண்டும் என்பதைக் காணலாம்
ஒவ்வாமை உள்ளவர்கள்
மாதுளை அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்
சர்க்கரை நோயாளிகள்
மாதுளம்பழத்தில் இயற்கையாகவே அதிகளவு சர்க்கரை உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடக் கூடாது. இல்லையெனில், இது சர்க்கரையின் அளவை மேலும் அதிகரிக்கலாம்
வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள்
வயிற்றுப்போக்கு அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனை கொண்டிருப்பவர்கள் மாதுளம்பழம் அல்லது மாதுளை சாறு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
உடல் எடை அதிகம் உள்ளவர்கள்
உடல் எடை அதிகம் கொண்டவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதில் கலோரிகள் உள்ளன. எனவே இவை உடல் எடையை மேலும் அதிகரிக்கும்
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
இரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மாதுளையைத் தவிர்க்க வேண்டும்
அசிடிட்டி உள்ளவர்கள்
அமிலத்தன்மை பிரச்சனை கொண்டவர்கள் மாதுளையை சாப்பிடக்கூடாது. மாதுளை குளிர்ச்சி என்பதால் இது உணவை சரியாக செரிமானம் அடையச் செய்யாமல் போகலாம்