இவர்கள் தவறுதலாக கூட மாதுளை சாப்பிடக் கூடாது!

By Karthick M
18 Jul 2024, 12:24 IST

மாதுளை ஆரோக்கியத்திற்கு அதீத நன்மை பயக்கும். இருப்பினும் ஒருசிலர் மாதுளை சாப்பிடக் கூடாது என உங்களுக்கு தெரியுமா? யார் மாதுளை சாப்பிடக் கூடாது என பார்க்கலாம்.

மாதுளையில் ஊட்டச்சத்து அதிகம்

வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி, பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்து, பாலிபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் மாதுளையில் உள்ளன. இருப்பினும் சிலர் மாதுளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது

மாதுளை அனுப்பு சுவை வாய்ந்தது. சர்க்கரை நோயாளிகள் மாதுளை சாப்பிடும் முன் மருத்துவரை அணுக வேண்டும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள்

உங்கள் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மாதுளை உங்கள் மருந்துகளுடன் வினைபுரியலாம். இது உடல் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமிலத்தன்மை உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது

அமிலத் தன்மை பிரச்சனையை எதிர்கொண்டால் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மாதுளை குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது.

இருமல் தொந்தரவு

உங்களுக்கு அடிக்கடி இருமல் இருந்தால் மாதுளை சாப்பிட வேண்டாம். இதை உட்கொள்வதால் நோய் தொற்று அதிகரிக்கும். எனவே அதிகமாக இருமல் ஏற்படும்.

தோல் அழற்சி பிரச்சனை

தோல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மாதுளை சாப்பிட்டால் உங்கள் சருமத்தில் சவிப்பு நிற தடிப்புகளை ஏற்படுத்தும்.