பலாப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இருப்பினும் சில நபர்கள் பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் யார் என்பது இங்கே.
சத்துக்கள் நிறைந்தது
பலாப்பழம் சத்துக்கள் நிறைந்தது. இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ், ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் உள்ளன. இதற்குப் பிறகும், சில சூழ்நிலைகளில் அதை உட்கொள்ளக்கூடாது.
நீரிழிவு நோய்
பலாப்பழத்தில் நீரிழிவு எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கிறது. இந்த வேகமான இரத்த சர்க்கரை அளவு குறைவது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
சிறுநீரக நோய்
சிறுநீரக நோயுடன் போராடுபவர்கள் கட்டாயம் பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பலாப்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனை உட்கொள்வதால், இரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவு அதிகமாகலாம். இவ்வாறு பொட்டாசியம் அதிகமாவது சிறுநீரகப் பிரச்சனைகள உண்டாக்கலாம்.
ஒவ்வாமை
இன்று பலரும் அலர்ஜியால் அடிக்கடி பாதிப்படைகின்றனர். அவர்கள் கட்டாயம் பலா பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தாவரங்களின் மகரந்தத்தால் ஒவ்வாமை, மரப்பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் எந்தவொரு அறுவை சிகிச்சைக்கும் முன்னும் அல்லது பின்னும் பலா பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இவர்களுக்கு வயிற்று பிரச்னை அதிகரிக்கலாம்.
கர்ப்பிணி பெண்கள்
பலாப்பழத்தில் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கலாம். இதனை கருவுற்ற பெண்கள் உட்கொள்வதால், தாய் மற்றும் சேய் இருவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக அமைகிறது.
இதில் குறிப்பிட்டுள்ளவர்கள் பலா பழம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இது தவிர, வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு பலாப்பழம் சாப்பிடுவது நல்லது.