தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், சில உடல்நல பிரச்சினை உள்ளவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? யாரெல்லாம் பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது என இங்கே பார்க்கலாம்.
நீரிழிவு நோய்
சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதற்கு முன் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், அவற்றில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கலாம்.
செரிமான பிரச்சினை
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் ஜீரணிக்க கடினமாக இருக்கும். குறிப்பாக, ஒரு பெரிய உணவுக்குப் பிறகு. அவை வீக்கம் மற்றும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
IBS நோய்க்குறி
பேரிச்சம்பழத்தில் பிரக்டோஸ் அதிகமாக உள்ளது. இது ஐபிஎஸ் அதாவது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு வீக்கம் மற்றும் வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.
உணவு ஒவ்வாமை
சிலருக்கு பேரிச்சம்பழங்களுக்கு ஒவ்வாமை இருக்கலாம் அல்லது அவர்களுக்கு உணர்திறன் இருக்கலாம்.
வயிற்றுப்போக்கு
பேரிச்சம்பழத்தில் சர்பிடால் என்ற சர்க்கரை ஆல்கஹால் உள்ளது. இது குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.
சிறுநீரக நோய்
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், அவர்கள் பொட்டாசியம் உட்கொள்வது குறித்து மருத்துவரை அணுக வேண்டும்.
சல்பைட் ஒவ்வாமை
சல்பைட் ஒவ்வாமை உள்ளவர்கள், சரியாகக் கழுவாத அல்லது தூய்மையற்ற பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால், வயிற்று உபாதைகள் ஏற்படும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா உள்ளவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்களில் பூஞ்சை இருக்கலாம். இது தோல் வெடிப்பு மற்றும் ஆஸ்துமா தாக்குதல்களை ஏற்படுத்தும்.