யிர் அனைவருக்கும் நன்மை பயக்கும். ஏனெனில், இது புரோபயாடிக்குகள், கால்சியம், புரதம், வைட்டமின் பி12 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றின் வளமான மூலமாகும். இருப்பினும், சிலர் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். யாரெல்லாம் தயிர் சாப்பிடக்கூடாது என பார்க்கலாம்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் தயிரை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவர்களால் பால் பொருட்களை சரியாக ஜீரணிக்க முடியாது.
செரிமான பிரச்சினை
ஆசிட் ரிஃப்ளக்ஸ், அஜீரணம் அல்லது அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தயிரைத் தவிர்க்க வேண்டும், குறிப்பாக இரவில்.
சுவாச பிரச்சனை
ஆஸ்துமா, சளி அல்லது பிற சுவாச நோய்கள் உள்ளவர்கள் இரவில் தயிரைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது சளி உருவாவதற்கு வழிவகுக்கும்.
சிறுநீரக பிரச்சினை
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அல்லது அதிக கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள் தயிரை அளவாக உட்கொள்ள வேண்டும்.
கீல்வாதம்
கீல்வாதம் உள்ளவர்கள் தயிர் சாப்பிடக்கூடாது. ஏனெனில், புளிப்பு உணவுகள் மூட்டு வலியை அதிகரிக்கும்.
ஒவ்வாமை
பால் பொருள் ஒவ்வாமை உள்ளவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கவும். இது, உங்கள் பிரச்சினையை அதிகரிக்கலாம்.