யாரெல்லாம் சியா விதைகளை சாப்பிடக்கூடாது தெரியுமா?

By Gowthami Subramani
16 Jun 2024, 17:30 IST

சியா விதைகள் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனினும், ஒரு சில பிரச்சனைகள் உள்ளவர்கள் சியா விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதில் சியா விதையை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதைக் காணலாம்

விழுங்குவதில் சிரமம்

விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் சியா விதைகள் உட்கொள்வதைத் தவிர்க்கலாம்

அழற்சி உள்ளவர்கள்

அழற்சி பிரச்சனை கொண்டிருப்பவர்கள் கட்டாயம் சியா விதைகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

இரைப்பை குடல் பிரச்சனைகள்

சியா விதை உட்கொள்வது சிலருக்கு செரிமான பிரச்சனை, வாயு அல்லது வீக்கம் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே இரைப்பை குடல் பிரச்சனை உள்ளவர்கள் சியா விதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்ப காலத்தில் சியா விதைகள் நன்மை பயக்கும். எனினும், அவர்களுக்கு ஒரு சில தீங்கினை விளைவிக்கலாம். எனவே மருத்துவர் அனுமதியின்றி சியா விதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்

புதிய பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சியா விதைகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

வயிறு உப்புசம் உள்ளவர்கள்

வயிறு உப்புசம் பிரச்சனை கொண்டிருப்பவர்கள், சியா விதைகளைத் தவிர்ப்பது நல்லது