காலிஃபிளவர் பொரியல், வறுவல், பஜ்ஜி, காலிஃபிளவர் கறி ஆகியவை நம் அனைவரின் வீடுகளிலும் அடிக்கடி செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், சிலர் இதை மறந்து சாப்பிட கூடாதாம்.
ஊட்டச்சத்து நிறைந்தது
கால்சியம், பாஸ்பரஸ், புரதம், கார்போஹைட்ரேட், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி, அயோடின் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் காலிஃபிளவரில் உள்ளன. மேலும், காலிஃபிளவரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இருந்தாலும் சிலர் காலிஃபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காலிஃபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காலிஃபிளவர் சாப்பிடுவதால் தாயின் வயிற்றில் வாயு உருவாகும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் குழந்தையை பாதிக்கும்.
இரத்தம் உறைதல்
பலருக்கு மிக மெல்லிய இரத்தம் இருக்கும். இந்நிலையில், இரத்தத்தை அடர்த்தியாக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் காலிஃபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் வைட்டமின் கே உள்ளது, இது இரத்தம் உறைவதற்கு உதவுகிறது.
வாயு பிரச்சனை
காலிஃபிளவரில் நல்ல அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, அவை எளிதில் உடைந்து போகாது. எனவே, அளவுக்கு அதிகமாக காலிஃபிளவர் சாப்பிடுவது வாயு பிரச்சினையை ஏற்படுத்தும்.
தைராய்டு பிரச்சனை
ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால், காலிஃபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த காய்கறி உங்கள் உடலில் T3, T4 ஹார்மோன்களை அதிகரிக்கும். இது உங்கள் நிலையை மேலும் மோசமாக்கலாம்.
சிறுநீரக கல்
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் காலிஃபிளவர் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது பித்தப்பை அல்லது சிறுநீரக கல் பிரச்சனை தூண்டும்.
யூரிக் அமிலம்
ஒரு நபரின் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால், அவர் காலிஃபிளவர் உட்கொள்ளக்கூடாது. காலிஃபிளவரில் பியூரின் உள்ளது, இது யூரிக் அமிலத்தை அதிகரிக்கச் செய்யும்.