பாதாம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில், உள்ள சத்துக்கள் பல நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. ஆனால், சில சமயங்களில் இதன் நுகர்வு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? யார் பாதாம் சாப்பிடக்கூடாது என பார்க்கலாம்.
பாதாமின் பண்புகள்
பாதாமில் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. பாதாமை குறைந்த அளவில் உட்கொள்வது நன்மை பயக்கும். ஆனால், தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிக எடை உள்ளவர்கள்
அதீத உடல் பருமன் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. இது உங்கள் எடையை அதிகரிக்கும்.
வயிறு பிரச்சனை
வயிறு சம்பந்தமான நோய்கள் வந்தால் பாதாம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதாம் பருப்பை அதிக அளவில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். கூடுதலாக, பாதாம் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் பாதாம் சாப்பிடக்கூடாது. அதிகப்படியான பாதாம் சாப்பிடுவது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
சிறுநீரக கல்
சிறுநீரக கல் உள்ள நோயாளிகள் பாதாம் பருப்பை சாப்பிடக்கூடாது. ஆன்டி-பயாடிக் மருந்துகளை உட்கொள்ளும்போது பாதாம் சாப்பிடுவது உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
வைட்டமின் ஈ சப்ளிமெண்ட்ஸ்
வைட்டமின் ஈ சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடுபவர்கள் பாதாம் சாப்பிடக்கூடாது. இதன் காரணமாக நீங்கள் சோம்பல், தலைவலி மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.