பப்பாளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில், உள்ள பண்புகள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதே சமயம், பப்பாளி சாப்பிடுவது சிலருக்கு தீங்கு விளைவிக்கும். யாரெல்லாம் பப்பாளி சாப்பிட கூடாது? எப்போது பப்பாளி சாப்பிடக்கூடாது என தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரக கல் பிரச்சினை
ஒருவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், அவர் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம்.
அதீத இதய துடிப்பு
பப்பாளி இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால், உங்களுக்கு வேகமாக அல்லது மெதுவாக இதயத் துடிப்பு பிரச்சனை இருந்தால், நீங்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது.
ஒவ்வாமை ஏற்பட்டால்
உங்களுக்கு லேடெக்ஸ் ஒவ்வாமை இருந்தால், நீங்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் அலர்ஜி பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம்.
வயிற்றுப்போக்கு
உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால், பப்பாளியை சாப்பிடக்கூடாது. இதனால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில்
கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தினமும் இதை உட்கொள்வது ஆபத்தானது.
குறைந்த இரத்த சர்க்கரை
பப்பாளி சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஆனால், குறைந்த இரத்த சர்க்கரை இருந்தால் அதை உட்கொள்ளக்கூடாது.
செரிமான பிரச்சனை
செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது. இது உங்கள் செரிமானத்தை பலவீனப்படுத்தலாம்.