இவங்கல்லாம் மறந்தும் இட்லி சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா?

By Gowthami Subramani
23 Oct 2024, 22:20 IST

இட்லி மிக ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும் சில காரணங்களால் சிலர் இட்லி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் இட்லியை யார் சாப்பிடக்கூடாது என்பதைக் காணலாம்

குடல் சார்ந்த பிரச்சனைகள்

அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் இட்லியை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில், இட்லி புளித்த உணவாக இருப்பதால் இது செரிக்கும் போது வெளியிடும் நிறைய வாயுக்கள் குடல் பிரச்சினைகளை அதிகரிக்கலாம்

செரிமான கோளாறுகள்

இட்லி சாப்பிடுவதால் செரிமான கோளாறு பிரச்சனை ஏற்படாது. ஆனால், ஏற்கனவே செரிமான கோளாறு பிரச்சினை உள்ளவர்கள் தவிர்ப்பது நன்மை பயக்கும்

அழற்சி பிரச்சனை

சிலர் உளுந்து உள்ளிட்ட பல்வேறு பருப்புகளால் அழற்சியை சந்திப்பர். அவர்கள் இட்லியை குறைத்துக் கொள்ளவோ தவிர்க்கவோ செய்யலாம்

மூட்டுவலி பிரச்சனை

மூட்டுவலி, ஆர்த்தரைடிஸ் உள்ளிட்ட பிரச்சினை உள்ளவர்கள் அதிகமாக அரிசி உணவுகள் எடுப்பது மூட்டு வலியை அதிகரிக்கிறது

அதிக உடல் எடை

இட்லியில் அதிகளவு கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்கக் கூடும். எனவே உடல் பருமன் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது

இந்த பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் தினசரி உணவில் இட்லியைச் சேர்க்கும் முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது