இவர்கள் எல்லாம் மறந்தும் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது?

By Devaki Jeganathan
26 Aug 2024, 05:42 IST

வெண்டைக்காயில் புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார்ச்ச்த்து, இரும்புச்சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. ஆனால், சில ஆரோக்கிய பிரச்சினை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. அவர்கள் யார் என பார்க்கலாம்.

சிறுநீரக பிரச்சனை

உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், வெண்டைக்காய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதுமட்டுமின்றி, சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கற்கள் இருந்தாலும் வெண்டைக்காய் சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தும்.

குடல் பிரச்சினை

அளவுக்கு அதிகமாக வெண்டைக்காய் உட்கொண்டால், உங்களுக்கு வயிற்று உப்புசம் பிரச்சனை ஏற்படலாம். ஏனென்றால், இதில் அதிகாலை அளவு நார்ச்சத்து இருப்பதால் நீங்கள் மந்தமாக உணர்வீர்கள்.

கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்

அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் எண்ணெயில் பொரித்த வெண்டைக்காயை சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.

செரிமான பிரச்சினை

அஜீரண பிரச்சினை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிட்டால் செரிமான மண்டலத்தில் மோசமான விளைவை சந்திப்பார்கள். இதை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாயு தொல்லை, வயிற்று வீக்கம் ஆகியவை ஏற்படும்.

சைனஸ் நோயாளிகள்

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இது உங்களின் அசௌகரியத்தை அதிகரிக்கலாம்.

இருமல் உள்ளவர்கள்

வெண்டைக்காயை அதிகமாக உட்கொள்வ இருமலை உண்டாக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஏற்கனவே உங்களுக்கு இருமல் இருக்கும் நிலையில்,அதை குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது.

வயிற்று பிரச்சனை

நீங்கள் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டாலோ அல்லது மலச்சிக்கலால் அவதிப்பட்டாலோ வெண்டைக்காயை தவிர்ப்பது நல்லது. வயிற்றுப்போக்கின் போது அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடக்கூடாது.