வல்லாரைக்கீரை நல்லது தான்! ஆனா இவங்கலாம் கட்டாயம் சாப்பிடக்கூடாது

By Gowthami Subramani
25 May 2024, 17:30 IST

வல்லாரை ஆங்கிலத்தில் பிராமி என்று அழைக்கப்படுகிறது. இது நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு, சரும ஆரோக்கியம், நீரிழிவு நோய் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால், இதை சிலர் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது

ஊட்டச்சத்துக்கள்

இந்த கீரையில் அதிகளவு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆல்கலாய்டுகள், ஜூஜூபோஜெனின், ட்ரைடர்பெனோயின் சபோனின் போன்ற மூலக்கூறுகள் நிறைந்துள்ளது

நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள்

வல்லாரை நரம்பு மண்டலத்தை சீராக செயல்பட வைப்பதுடன், சுறுசுறுப்பாக வைத்திருப்பினும், நுரையீரலுக்கு பிரச்சனையைத் தருவதாக அமைகிறது. இது ஆஸ்துமா, வீசிங் போன்ற நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு வல்லாரை உட்கொள்வது மோசமானதாக மாற்றலாம்

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்களும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் வல்லாரை சேர்த்துக் கொள்வது குறித்து தங்களுடைய மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ஏனெனில், இது சிலருக்கு வயிற்றுப் பிடிப்பு, குமட்டல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்

தைராய்டு நோயாளிகள்

வல்லாரையானது தைராய்டு ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கலாம். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குறிப்பாக தைராய்டு பிரச்சினைக்காக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் வல்லாரையை உணவில் தவிர்ப்பது நல்லது அல்லது மிகக்குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம்

சிறுநீர் பாதை அடைப்பு

வல்லாரை கீரை அதிகமாக எடுத்துக் கொள்வது, சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தலாம். எனவே ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உள்ளவர்கள் வல்லாரை சாப்பிடும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது

இரைப்பை குடல் பிரச்சனை

வல்லாரை ஆனது குடல் மற்றும் இரப்பையின் பாதைகளில் அழற்சி மற்றும் அடைப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, அல்சர் போன்ற வயிற்றுப் புண் பிரச்சினை இருப்பவர்களுக்கு பிரச்சனையை இன்னும் மோசமாக்கலாம். எனவே அல்சர் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் வல்லாரையைத் தவிர்ப்பது நல்லது