புரதம் ஏன் முக்கியம்
புரதங்கள் தசைகளின் வளர்ச்சி மற்றும் பழுது, ஹார்மோன்கள் செயல்பாடு, நொதி செயல்பாடு மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது
முட்டையில் உள்ள புரோட்டீன்கள்
முட்டை புரதத்தின் வளமான மூலமாகும். 100 கிராம் முட்டையில் 13 கிராம் புரதம் நிறைந்துள்ளது. புரதங்கள் நிறைந்த சைவ உணவுகள் சிலவற்றைக் காணலாம்
பாதாம்
புரோட்டீன்கள் நிறைந்த வளமான மூலங்களில் பாதாமும் ஒன்று. 100 கிராம் பாதாம் பருப்பில் 21-22 கிராம் புரதம் நிறைந்துள்ளது
கொண்டைக்கடலை
100 கிராம் வேகவைத்த கொண்டைக்கடலையில் 19 கிராம் அளவு புரதம் உள்ளது. இதை வேகவைத்து அல்லது வறுத்து எடுத்துக் கொள்ளலாம்
பூசணி விதைகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, 100 கிராம் அளவிலான பூசணி விதைகளில் 19 கிராம் புரதம் உள்ளது
சோயாபீன்
100 கிராம் அளவு சமைக்கப்படாத சோயாபீன் சுமார் 36 கிராம் புரதத்தை கொண்டிருக்கிறது
வேர்க்கடலை
இதில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. 100 கிராம் அளவிலான வேர்க்கடலையில் 26 கிராம் புரதங்கள் உள்ளது
பாதாம் பட்டர்
இது வேர்க்கடலை பட்டரை விட ஆரோக்கியமானதாகும். இதற்கு இதில் உள்ள அதிகளவிலான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களே காரணமாகும். 100 கிராம் பாதாம் பட்டரில் 21 கிராம் புரதம் நிறைந்துள்ளது
பாலாடைக்கட்டி
இது பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதில் அதிக புரதச்சத்து உள்ளது. 100கிராம் அளவு பனீர் அல்லது பாலாடைக்கட்டியில் 25 கிராம் புரதங்கள் நிறைந்துள்ளது. இது முட்டையை விட அதிக புரதம் நிறைந்ததாகும்