மழைக்காலத்தில் சில காய்கறிகள் ஈரப்பதத்தை அதிகரிப்பதால் பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுக்களின் தாக்கம் அதிகமாகலாம். இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்
மழைக்காலத்தில் காய்கறிகளை முறையற்ற முறையில் கையாளுதல் அல்லது சேமிப்பதன் மூலம் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். இதில் மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய காய்கறிகளைக் காணலாம்
இலை கீரைகள்
இலை கீரைகளை நன்கு கழுவாமல் இருப்பின், ஈகோலை போன்ற பாக்டீரியாக்களும், ஜியார்டியா போன்ற ஒட்டுண்ணிகள் வளரவும் காரணமாகிறது. எனவே ஈரமான சூழ்நிலையில் இலை கீரைகளைத் தவிர்க்கலாம்
காலிஃபிளவர்
காலிஃபிளவர் ஈரப்பதத்தை விரைவாக உறிஞ்சக் கூடியதாகும். இதை உலர்ந்த சூழலில் சேமிக்காவிட்டால் பூச்சிகள் மற்றும் புழுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி, ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடியதாக அமைகிறது
முட்டைக்கோஸ்
இது ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ளக் கூடிய காய்கறியாகும். இதனால் எளிதில் ஈகோலை பாக்டீரியாக்கள் செழித்து வளரலாம். இதனை முறையற்ற முறையில் சேமிக்கும் நோய்த்தொற்றுக்களைப் பரவும் அபாயம் ஏற்படுகிறது
குடைமிளகாய்
குடைமிளகாய் மெல்லிய தோலையும், அதிக நீர்ச்சத்துக்களையும் கொண்டதாகும். எனவே இவை எளிதில் பூஞ்சை வளர்ச்சிக்கு உள்ளாகி சுகாதாரக் கேடு விளைவிக்கிறது
வெள்ளரி
இவை தண்ணீரை எளிதில் உறிஞ்சி சரியாக சேமிக்கப்படாதபோது பாக்டீரியா தொற்றுக்களால் பாதிக்கப்படுகிறது. எனவே இதை உலர்ந்த இடத்தில் சேமித்து வைத்து உண்ணலாம்
தக்காளி
இது பூஞ்சை மற்றும் பூஞ்சை காளான் தொற்றுக்கு எளிதில் உள்ளாகிறது. எனவே அசுத்தமான தக்காளியை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்