நீண்ட கால ஆரோக்கியமான கண் பார்வைக்கு கண் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது அவசியமாகும். அதன் படி, சில சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது வயது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கவும், ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது
வைட்டமின் ஏ
நல்ல பார்வையை பராமரிக்கவும் விழித்திரையை ஆதரிக்கவும் வைட்டமின் ஏ முக்கியமானதாகும். இது இரவு நேரத்தில் ஏற்படும் குருட்டுத்தன்மை, வறண்ட கண் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது
வைட்டமின் சி
இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவும் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்க உதவுகிறது
வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ ஆனது வைட்டமின் சி உடன் இணைந்து ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இவை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கவும், கண்புரை அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
ஜிங்க்
விழித்திரை ஆரோக்கியத்திற்கு துத்தநாகம் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது இரவு நேர குருட்டுத் தன்மையை தடுக்கவும், ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
இவை ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையும் ஆதரிக்க உதவும் ஊட்டச்சத்து ஆகும். இவை கண் வறட்சியைத் தடுக்க உதவுகிறது