எந்தெந்த விதைகளை ஊறவைத்து சாப்பிடணும் தெரியுமா?

By Gowthami Subramani
19 Jan 2025, 18:47 IST

ஊறவைத்த விதைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் இதில் எந்தெந்த விதைகளை ஊறவைத்து உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்

சியா விதைகள்

இந்த விதைகள் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊறவைக்கும் போது, அது தண்ணீரை உறிஞ்சி, ஜெல் போன்ற தன்மையை அடைகிறது. இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இது உடலுக்குத் தேவையான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், உணவு நார்ச்சத்து போன்றவற்றை வழங்குகிறது

எள் விதைகள்

இதை ஊறவைத்து உட்கொள்வது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தி எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், இது பைடிக் அமிலத்தை உடைக்கும் என்சைம்களை செயல்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகிறது

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளை ஊறவைப்பதன் மூலம், அது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதுடன், செரிமானத்தை மேம்படுத்தும் என்சைம்களை செயல்படுத்துகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, மெக்னீசியம், செலினியம் போன்றவை சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

தர்பூசணி விதைகள்

இந்த விதைகளை ஊறவைத்து உட்கொள்வது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. குறிப்பாக, இதில் உள்ள மெக்னீசியம் சத்துக்கள், இதய ஆரோக்கியம், எலும்பு வலிமை மற்றும் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

வெந்தய விதைகள்

ஊறவைத்த வெந்தய விதைகளை சாப்பிடுவது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

ஆளி விதைகள்

ஆளி விதைகளை ஊறவைத்து உட்கொள்வது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உறிஞ்சப்படுகிறது. இது எடையிழப்பு, குடல் ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைப்பு போன்ற பல்வேறு நன்மைகளைத் தருகிறது

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகத்தை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், செரிமான சாறுகள் போன்றவை செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குவதுடன், உடல் சூட்டைத் தணிக்க உதவுகிறது. மேலும், உடல் எடையைக் குறைக்க சீரகத் தண்ணீர் உதவுகிறது