இந்த விதைகளை காலையில் சாப்பிடுங்க.. உடம்பு சட்டுன்னு குறையும்!!

By Ishvarya Gurumurthy G
14 Apr 2024, 08:30 IST

உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அப்போ இந்த விதைகளை தினமும் காலையில் எடுத்துக்கொள்ளவும். இது எடையை குறைக்க சிறப்பாக செயல்படும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள் எடை குறைக்க உதவும். இதில் ஒமேகா-3, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது உடல் கொழுப்பை குறைக்கிறது.

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகள் எடையைக் குறைக்க உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் எடையைக் குறைக்கும்.

சியா விதைகள்

எடை இழப்புக்கு சியா விதைகளை உட்கொள்ளுங்கள். இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவை உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பூசணி விதைகள்

பூசணி விதைகள் கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது.

உங்களுக்கு ஏதேனும் கடுமையான நோய் இருந்தால், அதை உட்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.