இந்த பழங்களை எல்லாம் நீங்க தோலுரிக்காமல் சாப்பிடலாம்

By Gowthami Subramani
30 Dec 2024, 09:49 IST

சில பழங்களைத் தோலுடன் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் தோலுரிக்காமல் சாப்பிட வேண்டிய பழங்கள் சிலவற்றைக் காணலாம்

மாம்பழம்

மாம்பழத்தை தோலுடன் சேர்த்து சாப்பிடலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

திராட்சை

திராட்சையில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி நிறைந்த திராட்சையை தோலுடன் உட்கொள்ளலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது

செர்ரி

செர்ரி பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை தோலுடன் உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்

கொய்யா

இது நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதை தோலுடன் முழுவதுமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது

பேரிக்காய்

பேரிக்காயில் நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உடலில் இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது

அத்திப்பழம்

இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை தோலுடன் உட்கொள்வது சுவையான விருப்பமாகும்