சில உணவு வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள். அது என்ன உணவு என்று இங்கே காண்போம்.
சில உணவு வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள். அது என்ன உணவு என்று இங்கே காண்போம்.
கோடையில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இருந்து முகத்தை பாதுகாக்க வீட்டு வைத்தியம் மற்றும் டிப்ஸ்களை மக்கள் பின்பற்றுகிறார்கள். மற்றவர்கள் சந்தையில் கிடைக்கும் பல்வேறு கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, வெளிப்புற பராமரிப்புடன், அதற்குத் தேவையான சத்துக்களை வழங்குவதும் முக்கியம் என்பதை பலர் கவனிப்பதில்லை. இதற்கு சில உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தர்பூசணி
கோடையில் தர்பூசணி எடுத்துக்கொள்வதால் சருமத்திற்கு தேவையான சத்து கிடைக்கும். ஏனெனில், தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமப் பராமரிப்பிற்கு உதவுகிறது.
தயிர்
தயிரில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றான லாக்டிக் அமிலம், பல தோல் பராமரிப்பு பொருட்களில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. லாக்டிக் அமிலம் ஒரு நல்ல எக்ஸ்ஃபோலியண்ட் மற்றும் சரும மாய்ஸ்சரைசர். மேலும், முதுமையைத் தடுக்கும் முகவராகவும் செயல்படுகிறது. தயிரில் ஜிங்க், வைட்டமின்கள் பி2, பி5, பி12 நிறைந்துள்ளது. வைட்டமின் பி2 சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சரும செல்களைப் பாதுகாக்கிறது.
சர்க்கரை வள்ளி கிழங்கு
வைட்டமின் ஏ நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கு, சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் மிகவும் திறம்பட செயல்படுகிறது. வைட்டமின் ஏ சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. இதனால், முகப்பருக்கள் உருவாவதைக் குறைத்து, சருமத்தை மென்மையாகவும் இளமையாகவும் மாற்றுகிறது. மேலும், இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் சருமத்திற்கு வயதாவதற்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி சருமத்திற்கு நல்லது.
குயினோவா
இதில் உள்ள அதிக அளவு ரிபோஃப்ளேவின் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமின்றி கழிவுகளை அகற்றவும் உதவுகிறது. இது புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை குறைவாகக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
கீரை
இதில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவையனைத்தும் ஆரோக்கியத்திற்கு நல்லது, சருமத்தை பளபளப்பாக மாற்றும். இவற்றுடன், பாதாம், மீன், டார்க் சாக்லேட் மற்றும் சிப்ஸ் போன்ற உணவுகளும் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.